ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்... சவரன் ரூ1.22 லட்சத்தை தாண்டியது!
சந்தையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.2,960 உயர்ந்து ரூ.1,22,640-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.370 உயர்ந்து ரூ.15,330-க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த திடீர் உயர்வு நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஜனவரி 26 அன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், ஜனவரி 27 அன்று சிறிது குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சாதனை விலையை எட்டியுள்ளது. இந்த மாற்றம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலர் மதிப்பு மாற்றம் மற்றும் உள்ளூர் தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. திருமண சீசன் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.400-க்கு விற்பனையாகிறது. விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
