ஒரே நாளில் 2 வது முறையாக உயர்ந்த தங்கம்... இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி!

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். விலை குறைவது போல போக்குக் காட்டி வந்த தங்கம் விலையானது, குறைந்த வேகத்தில் இன்று 2வது முறையாக உயர்ந்துள்ளது.
இன்று ஏப்ரல் 9ம் தேதி புதன்கிழமை காலையில் வணிகம் தொடங்கியதும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் இன்று வணிகம் நிறைவடையும் போது மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் மூலம், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,410க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.67,280 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.65,800க்கு விற்பனையான நிலையில், ஒரே நாளில் ரூ.1,480 வரை உயர்ந்திருப்பது இன்று மாலை கடைக்குச் சென்று தங்கம் வாங்கலாம் என காத்திருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி.
கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ1480 அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.104க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ104000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த ஏப்.4 முதல் குறைந்துகொண்டே வந்தது. இதனால், இல்லத்தரசிகளும் மக்களும் சற்று நிம்மதியடைந்த நிலையில், மேலும் குறையுமா என்று எதிர்பார்த்து வந்த நிலையில், எதிர்பாராதவகையில் 5 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது.
அதாவது ஏப்ரல் 4ம் தேதி தங்கம் விலை குறையத் தொடங்கியது. ஏப்ரல் 4ம் தேதி சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.67,200-க்கும், ஏப்ரல் 5ம் தேதி சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கும், ஏப்ரல் 7ம் தேதி சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும், ஏப்ரல் 8ம் தேதி சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தின்போது ரூ.1,480 அளவுக்கு உயர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!