தங்கம் சவரனுக்கு ரூ.520 குறைந்தது! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
தங்கம்

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை நேர நிலவரப்படி ஒரு கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து, ரூ.5,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ஆபரண தங்கத்தின் விலை 520 ரூபாய் குறைந்து ரூ.43,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், வளர்ச்சி விகிதமானது பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம், விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. 

இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Gold

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 65 ரூபாய் குறைந்து, ரூ.5,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ரூ.43,520-க்கு விற்பனையாகிறது.

அதே போல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,509-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 53 ரூபாய் குறைந்து, ரூ.4,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,400 ரூபாய் குறைந்து, ரூ.76,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web