"தீய சக்தியை ஒழித்து ஒளியேற்றிய தங்கம்!" - எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசியலில் நீங்கா இடம்பெற்றுள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள செய்தியில் அரசியல் எதிரிகளைச் சாடிப் பேசியுள்ளார்.
"தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றியவர் எம்.ஜி.ஆர்" என மறைமுகமாக திமுகவைச் சாடிப் பேசியுள்ளார். குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான மக்கள் ஆட்சியை நிலைநாட்டியவர் புரட்சித் தலைவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் 'பாரத் ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள்... @AIADMKOfficial எனும் மாபெரும்
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) January 17, 2026
மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய
மக்கள் திலகத்தின் பிறந்த நாள்.
தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த… pic.twitter.com/zOxiSfbzz3
அதிமுகவிற்கு எதிராக அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்களைத் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி மீண்டும் நல்லாட்சியை வழங்குவதே நம் கடமை எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"வெற்றிப் பாதையில் கழகத்தை அழைத்துச் செல்ல உடன்பிறப்புகளின் உழைப்பு அவசியம், உங்கள் முயற்சிகளுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்" எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
