ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கம் திருட்டு...பணிப் பெண் உள்பட 3 பேர் கைது!

 
திருட்டு நகைகள் கொள்ளை
காயல்பட்டினத்தில் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 38 தங்க நாணயங்களை திருடிய வழக்கில் பணிப் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கோமான் நடுத்தெருவைச் சேர்ந்தவர் யாகூப். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாஜிதா பர்வீன். இவர்களுக்கு 2மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் காயல்பட்டினம் வீட்டில் வசித்து வருகின்றனர்.

நகை கொள்ளை

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சாஜிதா பர்வீன், வீட்டு லாக்கரில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான தலா 8 கிராம் எடை கொண்ட 38 தங்க நாணயங்கள் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வீட்டு வேலைக்கார பெண் அருணாசலபுரம் தீபிகா என்ற அல்பியா (35), அவரது சகோதரி இசக்கி தங்கம் (42), இசக்கி தங்கம் மகன் தமிழரசன் (23) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?