காலையில் ஏறிய தங்கம் மாலையில் சரிவு...!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400 ஆக உள்ளது.

காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து அதிர்ச்சி அளித்த நிலையில், மாலையில் ரூ.500 வரை குறைந்தது. திடீர் உயர்வுக்குப் பிறகு ஏற்பட்ட இந்தச் சரிவு நகை வாங்குவோருக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளது.

இதற்கிடையே சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.345க்கு விற்பனையாகிறது. காலையில் ரூ.20 உயர்ந்த வெள்ளி விலை மாலையில் மீண்டும் குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி விலை உயர்வுக்குப் பின் சற்று தணிந்திருப்பது பொதுமக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
