வரலாறு காணாத உச்சத்தில் எகிறி அடிக்கும் தங்கம் , வெள்ளி விலைகள்!
கடந்த 16-ந்தேதியில் இருந்து தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தினமும் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், 21-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இடையில் ஒருநாள் மட்டும் சவரனுக்கு ரூ.1,720 குறைந்து சற்று நிம்மதி அளித்தாலும், மறுநாளே விலை மீண்டும் ஜெட் வேகத்தில் பறந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனையான தங்கம், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.450, சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.14,650-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,480, சவரனுக்கு ரூ.11,840 உயர்ந்து தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு பெரும் ‘ஷாக்’ கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,16,960-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.14,620-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் ஏறுமுகமாக உள்ளது. கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3,55,000-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.355-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக இனி வரும் நாட்களிலும் விலையில் ஏற்ற இறக்கம் தொடரும் என கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
