தங்கம் மீண்டும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்து விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக சவரனுக்கு ரூ.20,000-க்கும் மேல் சரிவை சந்தித்த தங்கம், இந்தியா – அமெரிக்கா ஒப்பந்த அறிவிப்புக்குப் பிறகு மீண்டும் உயர தொடங்கியுள்ளது. திங்கட்கிழமை மாற்றமின்றி இருந்த தங்கம், நேற்று ரூ.2,560 உயர்ந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.630 உயர்ந்து ரூ.14,900 ஆகவும், ஒரு சவரன் ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.20 உயர்ந்து ரூ.320 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 உயர்ந்து ரூ.3,20,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்தைப் பொறுத்து தங்கம், வெள்ளி விலைகள் நாள்தோறும் மாறி வருகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்வதால் விலை தொடர்ந்து உயர்கிறது. தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இது மகிழ்ச்சியை அளித்தாலும், விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
