தங்கம் விலையில் திடீர் சரிவு… 3 நாளில் சவரனுக்கு ரூ.2,880 குறைவு!
சர்வதேச சந்தையில் பணவீக்கம், பங்குச் சந்தை சரிவு மற்றும் நாணய மதிப்பு மாற்றம் போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் முதலில் தங்கம் விலை திடீரென உயர்ந்தது.

ஆனால் தொடர்ந்து போர் தீவிரமடைந்ததுடன் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்ததால் உலக பொருளாதாரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக பங்குச் சந்தை வீழ்ச்சியடையும் போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்வு செய்வார்கள். இருப்பினும் தற்போதைய சூழலில் தங்கம் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டாலும் பெரும்பாலும் சரிவை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மூன்றாவது நாளாகவும் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.14,760-ஆக உள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ.2,880 குறைந்ததால் நகை வாங்க விரும்புவோருக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
