ஒரே நாளில் 2 வது முறையாக சரிந்த தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!

 
தங்கம் தங்கம்

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதிரடியாகச் சரிந்து, நகைப்பிரியர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ.2,160 குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.3,200 சரிவைக் கண்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.5,360 வரை குறைந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சியால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் இப்போதே அலைமோதத் தொடங்கியுள்ளது.

தங்கம்

22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் காலை நிலவரப்படி ரூ.270 குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.400 வரை சரிந்து ரூ.13,900-க்கு விற்பனையாகிறது. அதேபோல், தூய தங்கம் (24 கேரட்) விலையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்த நிலையில், பிற்பகலில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ தங்கம் ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களே இந்த அதிரடி விலை சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தங்கம்

திருமண சீசன் மற்றும் கோடை விடுமுறை நெருங்கி வரும் வேளையில், தங்கத்தின் விலை இப்படி அதிரடியாகக் குறைந்துள்ளாது நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது. "விலை இன்னும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா?" என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், தற்போதைய இந்தச் சரிவைப் பயன்படுத்திப் பலரும் முதலீட்டு ரீதியாகவும், சுப நிகழ்ச்சிகளுக்காகவும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சரிந்திருப்பது மெட்ராஸ் மெட்டல் மார்க்கெட்டில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!