சர்ர்....ரென சரிந்த தங்கம்... சவரன் ரூ1,03,600 க்கு விற்பனை!
கடந்த சில மாதங்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது அதிரடியாகச் சரிந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் எதிர்பாராத விதமாக 1.34 லட்சத்தைத் தொட்டு அதிர்ச்சி கொடுத்தது. சர்வதேச சந்தையில் நிலவிய பொருளாதாரச் சூழல் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் வாங்கி குவித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை மீண்டும் உயரும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு அதிகரித்தது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களின் கவனத்தைத் தங்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் பக்கம் திருப்பியுள்ளனர். இதன் விளைவாக, கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை சரசரவெனக் குறையத் தொடங்கியது. பிப்ரவரி 21-ஆம் தேதி 1.08 லட்சமாக இருந்த தங்கம் விலை, இன்று மேலும் அதிரடியாகக் குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 670 ரூபாய் குறைந்து 12,950 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு ஒரே நாளில் 5,360 ரூபாய் குறைந்து 1,03,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 15 ஆயிரம் ரூபாய் சரிந்து 2.35 லட்சத்திற்கும் விற்பனையாகிறது. போர்ச் சூழல் நீடிக்கும் வரை முதலீடுகள் கச்சா எண்ணெய்யிலேயே இருக்கும் என்பதால், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
