சர்ரென இறங்கிய தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
கடந்த சில நாட்களாக கண்ணாமூச்சி காட்டி வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. நேற்று மாலை வரை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் 1,09,360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 170 ரூபாய் வரை உயர்ந்து மிரள வைத்த தங்கம், இன்று திடீரென சரிவைச் சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த வார தொடக்கத்தில் விலை குறைந்து காணப்பட்டாலும், இடையில் ஏற்பட்ட அதிரடி உயர்வுகளால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். இன்றைய இந்த விலை வீழ்ச்சி, தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராமுக்கு 5 ரூபாயும், ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களே இந்த விலை சரிவுக்குக் காரணம் எனத் தெரிவதால், வரும் நாட்களிலும் இந்த நிலை நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
