தங்கம் , வெள்ளி விலை அதிரடி சரிவு... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 02) சற்றும் எதிர்பாராத விதமாக அதிரடியாகக் குறைந்துள்ளது. நேற்று ஏப்ரல் 1-ஆம் தேதி சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,400 என்ற வரலாற்றுச் சாதனை விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவு நகை வாங்குபவர்களிடையே சிறு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.14,050-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.100 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தங்கம் விலை, இன்று சற்றே இறங்கியிருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,55,000-க்கு விற்கப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கைப் பொறுத்து விலையில் இந்த ஏற்ற இறக்கங்கள் நிலவி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
