வெள்ளிக்கிழமையில் அதிர்ச்சி.... மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!
தங்கத்தின் விலை ஏறுகிறதா அல்லது ராக்கெட் வேகத்தில் பறக்கிறதா என்று தெரியாத அளவிற்கு தங்கம் விலை இன்று உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விலை கூடுகிறது என்ற ஒற்றை காரணத்தைச் சொல்லி, இங்கே நகைக்கடைக்காரர்கள் கல்லா கட்டத் தொடங்கிவிட்டனர். ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயைத் தாண்டி நிற்பதைப் பார்த்தால், இனி நகைக் கடைப் பக்கம் போவதற்கே மக்கள் பயப்படும் சூழல் உருவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து நடுத்தர வர்க்கத்தினரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

நிபுணர்கள் சொல்வதைக் கேட்டால் இன்னும் சில நாட்களுக்கு இந்த விலை ஏறுமுகம் குறைய வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் அதிகரித்து, தற்போது ஒரு கிராம் 13,850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு சவரன் வாங்குவதற்கு 1,10,800 ரூபாய் கையில் இருக்க வேண்டும் என்கிற நிலை வந்துவிட்டது. கல்யாண விசேஷம் வைத்திருப்பவர்கள் எல்லாம் இப்போது நகைக் கடையில் விலையைக் கேட்டு விட்டு செய்வதறியாது திகைத்துப் போய் நிற்கின்றனர்.

தங்கம் இப்படி எகிறிக் கொண்டிருக்க, வெள்ளி மட்டும் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பிடிவாதமாக ஒரே இடத்தில் நிற்கிறது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனையாகி ஓரளவுக்கு ஆறுதல் தருகிறது. ஆனாலும் மஞ்சள் உலோகத்தின் மீதான மோகம் குறையாத இந்த நாட்டில், விலை உயர்வு என்பது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
