தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,720 உயர்வு!

 
தங்கம் தங்கம்

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முக்கியச் சேமிப்பாகக் கருதப்படும் தங்கம் விலை, சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாகத் தற்பொழுது கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சவரன் தங்கம் விலை 1 லட்சம் ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பது, நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் திருட்டு

நேற்று தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், இன்று ஏப்ரல் 8-ம் தேதி மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.2,720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கணிசமாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,880 என்ற நிலையை எட்டியுள்ளது.

தங்கம் வெள்ளி

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புவதே இந்தத் தொடர் விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. திருமண விசேஷங்கள் நெருங்கி வரும் வேளையில், இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் பட்ஜெட்டை முற்றிலுமாகச் சிதைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!