பெண்களுக்குப் பொற்காலத் திட்டம்.. ரூ.5,000 மானியம்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?!
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கிப் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக, வணிக ரீதியிலான மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கத் தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது. ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள வணிக ரீதியிலான இயந்திரங்களை வாங்கும் போது, மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும்.
மிளகாய், மசாலா போன்றவற்றை அரைக்கும் 'உலர் மாவு இயந்திரம்' மற்றும் இட்லி, தோசை மாவிற்கான 'ஈர மாவு அரைக்கும் இயந்திரம்' ஆகிய இரண்டிற்கும் இது பொருந்தும்.

யாரெல்லாம் தகுதியானவர்கள்?
விண்ணப்பதாரர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருக்க வேண்டும். 25 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கைம்பெண்கள் (விதவைகள்), ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
பிறப்புச் சான்றிதழ் அல்லது வயதுச் சான்று, வட்டாட்சியரிடம் பெறப்பட்ட வருமானச் சான்றிதழ், கைம்பெண்/ஆதரவற்றோர் என்பதற்கான சான்று (பொருந்துமானால்), ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) மற்றும் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.
இந்த மானியம் பெற விரும்பும் பெண்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு (District Social Welfare Office) நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த அலுவலகம் செயல்படும்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
