4 நாட்களுக்கு பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு ரத்து!

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை முருகன் கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி மலை முருகன் கோவிலில் இன்று ஏப்ரல் 10ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கிலும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.
நாளை பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் தங்கத்தேர் புறப்பாடு இன்று முதல் 4 நாட்களுக்கு நடைபெறாது எனக் கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!