Good Bad Ugly... மதுரை ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் தல ஆக கொண்டாடப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இதில் அஜீத்துடன் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தை பொறுத்தவரை, முதல் காட்சி 9 மணிக்கு மட்டுமே திரையிடப்படுகிறது. இந்நிலையில், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் முதல் காட்சி மதுரையில் திரையிடப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் முதல் காட்சி டிக்கெட் ரூ.1,900க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், தனி திரையரங்குகளில் முதல் காட்சி டிக்கெட் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ரூ.500-க்கு டிக்கெட் விற்கவில்லை என்றால் முதல் காட்சி கிடையாது எனவும் 12 மணிக்குதான் காட்சியை தொடங்க வேண்டும், எனவும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மதுரையில் 30 திரையரங்குகளில் இன்னும் குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் சிறப்பு காட்சி டிக்கெட் விற்பனை தொடங்கப்படவே இல்லை. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!