குட் பேட் அக்லி டீசர் புரோமோ... அஜித் ரசிகர்கள் உற்சாகம்!

 
குட் பேட் அக்லி

தமிழ் திரையுலகில் தல ஆக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜீத் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி' இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.
அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உட்பட பல  நடிகர்களும் நடித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டு வெளியாக ஏப்ரல் 10 ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதனால், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் நடிகை த்ரிஷா 'ரம்யா'   கதாபாத்திரத்தில் நடிப்பதாக வீடியோ வெளியிட்டு அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்று பிப்ரவரி 25ம் தேதி  குட் பேட் அக்லி படத்தின் டீசர் பிப்ரவரி 28 ம் தேதி வெளியாகலாம் என புரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளன. அந்த புரோமோவில் அஜித் இரு வெவ்வேறு தோற்றங்களில் வருவதும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பைப் பெற்றுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web