‘குட் பேட் அக்லி’ பாடல்கள்... ரூ5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்!

 
குட் பேட் அக்லி

நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது.  
இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குட் பேட் அக்லி

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி  கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.    நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தான் இசையமைத்த 3 பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை ஈடுசெய்யும் வகையில் ரூ.5 கோடி இழப்பீடு கொடுக்க  வேண்டும்,

 குட் பேட் அக்லி புரோமோ

இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள்ளார். 3 பாடல்களையும் குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். அத்துடன்  7 நாட்களுக்குள் படக் குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என இளையராஜா வலியுறுத்தியுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web