குட் நியூஸ்... இந்தியாவில் சில்லறை விற்பனை கடைகளைத் துவங்கியது ஆப்பிள் ஐபோன்!

 
ஆப்பிள் ஐபோன் செல்போன்

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஆப்பிள், சில்லறை விற்பனைக்கடைகளை அதிகளவு தொடங்குவதற்கு ஆர்வம் கொண்டுள்ளது. உலகின் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையைக் குறிவைத்துள்ளது. இந்தியாவில் 70 கோடிக்கும் அதிகமானோர் ஸ்மார்ட் போன்களை பயன் படுத்துகின்றனர். இவர்களில் 4 சதவிகிதம் பேர் மட்டுமே ஆப்பிள் தயாரிப்பான ஐபோன்களைப் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் விலை குறைவான சீனா மற்றும் தென்கொரி யாவின் நாடுகள் தயாரிக்கும் போன்களை அதிகளவு பயன் படுத்துகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில், தன் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில் சில்லறை கடைகளை த்திறக்க திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் செல்போன்

இந்த ஆர்வத்துக்குக்கார ணம், ஆப்பிள் போன்களின் விற்பனையால் கிடைத்த வருமானம்தான். இந்தியாவில் கடந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் போன்கள் கிட்டத் தட்ட 49 ஆயிரத்து 100 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட விற்பனை இலக்கை எட்டியுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனை வருமானத்தில் 2 சதவிகிதம்தான் என்றாலும் கடந்த ஆண்டில் சற்றே விற்பனை கூடியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 33 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு போன் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது, அதன் நிர்வாகிகளுக்கு இது உற்சாகத்தைக் கொடுத்தை அடுத்து, இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையிலும், நிர்வாகத் தலை நகரான டில்லியிலும் தன் நேரடி சில்லறை விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் செல்போன்

இதைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி நகரங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டு, அதன் விற்பனையை மேலும் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மும்பையில் இதன் முதல் சில்லறை விற்பனைக் கடையை, ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம்குக் திறந்து வைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web