குட் நியூஸ்... +2 பொதுத்தேர்வுக்குக் கால்குலேட்டர் அனுமதி - வழிகாட்டுதல்கள் வெளியீடு!

 
தேர்வு தேர்வில் கால்குலேட்டர்

மாணவர்களின் சுமையைக் குறைக்கவும், தேர்வு நடைமுறைகளை நவீனப்படுத்தவும் இந்த ஆண்டு, பொதுத்தேர்வில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல், 12-ம் வகுப்பு கணக்குப்பதிவியல் தேர்வு எழுதும் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டர்களைதேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது வணிகவியல் பிரிவு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்களாக, 'இல்லம் தேடி கல்வி' தன்னார்வலர்கள், ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்கள் மற்றும் இளங்கலை 2-ம் ஆண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு வினாக்களின் வரிசை மாற்றப்பட்ட 5 விதமான வினாத்தாள்கள் வழங்கப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களுக்கு A4 அளவில் பெரிய எழுத்துக்களில் அமைந்த லாகரிதம் புத்தகங்கள் வழங்கப்படும்.

தேர்வு

தேர்வு முடிந்த பிறகு, எஞ்சியிருக்கும் வினாத்தாள்களைத் தேர்வு அறையிலேயே மாணவர்கள் முன்னிலையில் வைத்து சீல் செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வினாத்தாள் கசிவு முற்றிலும் தடுக்கப்படும்.

தனித்தேர்வர்கள் தங்களின் சொந்த ஊரிலேயே தேர்வு எழுதும் வகையில், அவர்களின் முகவரியை உறுதி செய்ய ஆதார் அட்டை சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

இந்த ஆண்டு மொத்தமாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானோர் தேர்வெழுத உள்ளனர். 12-ம் வகுப்பு: 8,27,475 தேர்வர்கள். 11-ம் வகுப்பு: 25,051 தேர்வர்கள். 10-ம் வகுப்பு: 9,09,002 தேர்வர்கள்.10 மற்றும் 12-ம் வகுப்பு சேர்த்து சிறைவாசிகள் 676 பேர். மொத்தம் 10,000-க்கும் மேற்பட்ட மையங்கள். 49,000 ஆசிரியர்கள் மற்றும் 4,900 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!