குட் நியூஸ்... 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தல்!

 
எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (முன்னாள் வலுவிழந்த 'டிட்வா' புயல்) தற்போது மேலும் வலுவிழந்ததன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கைக் கூண்டுகளை இறக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

வங்கக்கடல் பகுதியில் வானிலை சீராகி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கைக் கூண்டுகளை இறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள துறைமுகங்களின் விவரம்:

புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களிலும் தற்போது புயல் அச்சுறுத்தல் நீங்கியதால், புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் இறக்கப்படும். இந்த அறிவிப்பு, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், மீனவர்களுக்கும் ஓர் ஆறுதலான செய்தியாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!