ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ்... ஆதாரை இணைக்க ஜனவரி வரை கெடு!

 
ரேஷன் கார்டு
 

தமிழகத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களைப் பெறும் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்க்கும் பணி 100% நிறைவடையாததால் மத்திய அரசு கெடு விதித்துள்ளது. தமிழகத்தில் 98.45 லட்சம் முன்னுரிமை மற்றும் 18.64 லட்சம் அந்தியோதயா அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு மாதம் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்கள் ரேஷன் கடைக்குச் சென்று, விற்பனை முனையக் கருவியில் (PoS) விரல் ரேகையைப் பதிவு செய்து ஆதார் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

ரேஷன்

இந்தச் சரிபார்ப்புப் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தபோதிலும், இன்னும் சுமார் 36 லட்சம் உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகையைப் பதிவு செய்யாமல் உள்ளனர். இதை முடிக்க மத்திய அரசு பலமுறை அவகாசம் அளித்த நிலையில், தற்போது 2026 ஜனவரி மாதத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு இறுதிக் கெடு விதித்துள்ளது. எனவே, இந்தச் சரிபார்ப்புப் பணியை இம்மாதத்திற்குள் முடிக்க அனைத்து கூட்டுறவு இணைப் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு

உணவுத் துறை அதிகாரிகள் இதுகுறித்துத் தெரிவிக்கையில், ரேஷன் அட்டைதாரர்கள் தமிழகம் முழுவதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் சென்று தங்களது விரல் ரேகையைப் பதிவு செய்து, ஆதார் உண்மைத்தன்மையை உறுதி செய்துகொள்ளலாம். இலவச அரிசி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து பெறுவதற்கு இந்தச் சரிபார்ப்பு கட்டாயம் என்பதால், நிலுவையில் உள்ள 36 லட்சம் உறுப்பினர்களும் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!