வர்ற பொங்கல் பண்டிகைக்கு குட் நியூஸ்... அமைச்சர் சேகர்பாபு அசத்தல் அறிவிப்பு!

 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

வர்ற பொங்கல் பண்டிகைக்கு நிஜமாகவே குட் நியூஸ் தான். பொங்கல் பண்டிகைக் காலத்திற்குள் கிளாம்பாக்கத்தில் கட்டபட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு இது மிக பெரிய தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகா் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து

தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காவல்நிலையம், பூங்கா அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, கடந்த டிசம்பர் 12-ம் தேதி முதல்கட்டமாக வண்டலூர் பூங்காவில் இருந்து 100 அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

பேருந்து

இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது தினசரி 2,310 பேருந்துகள் இயக்கப்படும், 840 ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்றார்.

அதேபோல், பேருந்து நிலைய வளாகத்திற்குள் மருந்து கடைகள், ஓட்டுநர், நடத்துநர் ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தீயணைப்புத் துறை வண்டிகள் நிறுத்தப்படும். அதேபோல், தனி காவல்நிலையம் செயல்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web