குட் நியூஸ்... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2% ஆக உயர்வு!
இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தக் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியாக இது பதிவாகி உள்ளது.
இந்த வலுவான பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பற்றி தேசியப் புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office - NSO) தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் (மொத்த உள்நாட்டு உற்பத்தி - GDP) என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். இந்த மதிப்பு 8.2 சதவீதமாக அதிகரித்திருப்பதற்கான முக்கியக் காரணங்களாக, பின்வரும் காரணிகள் குறிப்பிடப்படுகின்றன.

நாட்டின் உற்பத்தித் துறையில் (Manufacturing Sector) தயாரிப்பு மற்றும் உற்பத்தி வேகம் அதிகரித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறைக்கப்பட்டதால், விற்பனை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளில் உத்வேகம் காணப்பட்டது. பொதுமக்களிடையே பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் நுகர்வுத்திறன் அதிகரித்ததும் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
இந்தப் பல காரணிகளின் கூட்டு விளைவாலேயே நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீண்டு, மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

நாட்டின் பொருளாதாரம் இந்த வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதற்குக் காரணமாக, மத்திய அரசின் பொருளாதாரச் சீரமைப்பு மற்றும் வளர்ச்சிக் கொள்கைகளே காரணம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். அரசின் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் சரியான பாதையில் செல்கின்றன என்பதையே ஜூலை - செப்டம்பர் காலாண்டு ஜிடிபி வளர்ச்சியின் முடிவு காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
