குட் நியூஸ்.. இனி UPI-யில் பணம் அனுப்ப செல்போன் நம்பர் தேவையில்லை - ரகசியத்தைப் பாதுகாக்க 8-9 இலக்க எண் வசதி!
யுபிஐ (UPI) மூலம் பணம் அனுப்ப இனி உங்கள் மொபைல் எண்ணை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் எண் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், மொபைல் எண்ணுக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய பிரத்யேக யுபிஐ எண் (UPI Number) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யுபிஐ எண் என்றால் என்ன?
தனிப்பட்ட ரகசியம்: தற்போது, நாம் யாருக்காவது பணம் அனுப்பவோ அல்லது பெறவோ செல்போன் எண்ணைப் பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்த எண்ணைப் பயன்படுத்தி சிலர் போன் செய்வது, மெசேஜ் அனுப்புவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவே இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய எண்:
இனிமேல், யுபிஐ மூலம் பணம் அனுப்ப அல்லது பெற, மொபைல் எண்ணுக்குப் பதிலாக 8 முதல் 9 இலக்கங்களைக் கொண்ட தனியான ஒரு யுபிஐ எண்ணை (UPI Number) உருவாக்கிக்கொள்ள முடியும். இந்த யுபிஐ எண்ணைச் சொன்னாலே போதும், உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணம் வந்து சேர்ந்துவிடும்.
யுபிஐ எண்ணை உருவாக்குவது எப்படி?
நீங்கள் பயன்படுத்தும் கூகுள் பே, ஃபோன்பே போன்ற எந்த ஒரு யுபிஐ பேமெண்ட் செயலியில் இருந்தும் இந்த யுபிஐ எண்ணை உருவாக்கலாம். உதாரணமாக, ஃபோன்பே செயலியில் உருவாக்குவதற்கான வழிமுறைகள்:
உங்கள் PhonePe App-ஐ கிளிக் செய்யவும். அதில் உள்ள ‘Manage Payments’ என்ற ஆப்ஷனில் சென்று ‘View All’ கொடுக்கவும்.
கீழே தெரியும் ‘UPI Settings’ ஆப்ஷனைக் கிளிக் செய்யவும். அதில் ‘UPI Number’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதன் கீழே உள்ள ‘Add another UPI number’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

விதிமுறைகள்:
இந்த ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே சென்றால், UPI எண் உருவாக்கப்படுவதற்கான விதிமுறைகள் (UPI number rules) கொடுக்கப்பட்டிருக்கும்.
உருவாக்குதல்:
விதிமுறைகளின்படி, நீங்கள் விரும்பும் 8 அல்லது 9 இலக்க எண்ணைப் பதிவிட்டு முயற்சி செய்ய வேண்டும். அந்த எண் வேறு யாராலும் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதுவே உங்களுக்குரிய தனித்துவமான (Unique) யுபிஐ எண்ணாக வழங்கப்படும்.
யுபிஐ எண் கிடைத்த பிறகு, பணம் அனுப்ப அல்லது பெற உங்கள் மொபைல் எண்ணுக்குப் பதிலாக இந்த யுபிஐ எண்ணைப் பயன்படுத்தினால் போதும். உங்கள் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு மேம்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
