குட் நியூஸ்... இனி ரயிலில் ஸ்லீப்பர் வகுப்பிலும் தலையணை, பெட்ஷீட் வசதி!
இந்தியாவில் தினந்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவைகளைப் பயன்படுத்திப் பயணம் செய்து வருகின்றனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் தற்போது ஸ்லீப்பர் வகுப்பில் (AC அல்லாத) பயணம் செய்வோருக்கான புதிய மற்றும் முக்கியமான ஒரு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக, இந்திய ரயில்வேயில் ஏசி வகுப்புகளில் (AC Class) பயணம் செய்வோருக்கு மட்டுமே போர்வை (பெட்ஷீட்) மற்றும் தலையணை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஏசி அல்லாத சாதாரண ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்வோர், குளிர் மற்றும் வசதிக்காகத் தாங்களே படுக்கை விரிப்புகளைக் கொண்டு வர வேண்டியிருந்தது.

இந்தச் சிரமத்தைப் போக்கும் விதமாக, இனி சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளிலும் படுக்கை விரிப்பு மற்றும் தலையணை வழங்கும் வசதியைக் கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தச் சிறப்புச் சேவையானது ஜனவரி 1, 2026 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த வசதியைப் பயணிகள் இரண்டு விதமாகப் பெற்றுக் கொள்ளலாம்: முன்பதிவு மூலம்: பயணிகள் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, இந்த வசதிக்கான கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

ரயிலில் நேரடியாக: பயணம் செய்யும்போது, ரயிலில் இருக்கும் ஊழியர்களிடம் உரிய கட்டணம் செலுத்தியும் இந்த வசதியை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வசதிக்காக ரயில்வே நிர்வாகம் நியாயமான கட்டணத்தை நிர்ணயித்துள்ளது: தலையணை: ₹30 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பெட் ஷீட் (போர்வை): ₹20 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இந்த அறிவிப்பு, நீண்ட தூரம் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்யும் இலட்சக்கணக்கான சாதாரணப் பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
