குட் நியூஸ்... முதியோர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை மற்றும் இல்லத்தரசிகளுக்கான நிதியுதவி ஆகியவற்றை உயர்த்தி வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி, கீழ்க்கண்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்: ஏற்கனவே அறிவித்தபடி, முதியோர்களுக்கான உதவித்தொகையில் கூடுதலாக ரூ. 500 உயர்த்தி விரைவில் வழங்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, அரசின் வேறு எந்த உதவியும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு தற்போது மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இது விரைவில் ரூ. 2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

மக்கள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம் என்று குறிப்பிட்ட முதல்வர், ஏற்கனவே ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். மக்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் சத்துணவுக்காக ஒரு கிலோ கேழ்வரகு மாவு வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ ரமேஷ், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், துறை இயக்குனர் முத்துமீனா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்புகள் முதியோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
