குட் நியூஸ்.. டெலிவரி ஊழியர்களுக்கு ‘ரெஸ்ட் பாயிண்ட்ஸ்’.. சொமேட்டோ நிறுவனம் புதிய முயற்சி!

 
ஸ்விக்கி டெலிவரி உணவு

நடுராத்திரி 2 மணிக்கு எழுந்து பசிக்குது என்று பாதி பட்டினியில் படுத்துறங்காமல் செல்போனை எடு.. விதவிதமாக சாப்பிடு என்கிறவர்கள் ஆகட்டும்.. குவாட்டர் பாட்டிலை ராவாக காலி செய்து விட்டு, சுத்தியிருக்கிற அசைவ உணவகங்களில் கண்ணுக்கு தெரிந்ததை எல்லாம் சைட்டிஸாக ஆர்டர் செய்து சாப்பிடும் ‘குடி’ மகன்களாகட்டும்.. ஸ்விக்கி, சொமோட்டோ போன்ற உணவு டெலிவரி ஆஃப்கள் வரப்பிரசாதம் தான். ஆயிரத்தில் ஒன்றோ, லட்சத்தில் ஒன்றோ தவறுகள் நிகழ்ந்தாலும், பசித்த வயிறுக்கு நேரத்துக்கு உணவை வழங்கும் மிகப் பெரிய சேவையை செய்கிறார்கள். அதற்கு ஊதியம் பெற்றாலும், நிறைய பேரின் அக்கறை சேவையாகவே இருக்கிறது. விலாசம் கண்டுப்பிடிப்பதில் உள்ள சிரமங்களில் துவங்கி, நாய்கள் ஜாக்கிரதை கேட்  போர்ட்டில், லிப்ட் இல்லாத மாடிகளில், டெலிவரி செய்ய போயிருக்கையில், போனை எடுக்காத மிதப்பு பேர்வழிகள் என ஏகப்பட்ட இம்சைகளுக்கு நடுவில் தான் வாயுக்கும், வயிற்றுக்குமாக வாழ்கிறார்கள்.

இந்நிலையில், உணவு டெலிவரியில் ஈடுபடும் தனது நிறுவனத்தின் ஊழியர்கள் ஆசுவாசப்படுத்தி கொள்ள வசதியாக ஓய்வு மையங்கள் அமைக்கப்படும் என சொமேட்டோ தெரிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் பல பகையான உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்று சொமேட்டோ. இந்த நிறுவனம் ஓரிடத்தில் இருக்கும் பயனாளருக்கு அவர்கள் விரும்பிடும் இடத்தில் உணவை பர்ச்சஸ் செய்து குறித்த நேரத்திற்கு விரைவாக சென்று அவர்களிடம் ஒப்படைப்பதே முதன்மையான வேலை. 

Zomato

இதில் ஆயிரகணக்கான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 24 மணிநேரமும் உணவு டெலிவரி செய்யும் உணவு விநியோக நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை சரியாக நடத்துவதில்லை என்று புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், ஷெல்டர் புராஜெக்ட் என்ற திட்டத்தின்கீழ் ஓய்வெடுக்கும் வசதியினை அந்த நிறுவனம் ஏற்படுத்தி தர இருக்கிறது. அந்த ஓய்வறைகளில், அதிவேக வைஃபை இணைப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகள், முதலுதவி மருந்துகள் செல்போன் சார்ஜ் செய்து கொள்வதற்கான வசதி, தூமையான குடிநீர், கழிவறை ஆகிய வசதிகள் அந்த ஓய்வு மையங்களில் இருக்கும் என சொமேட்டோ நிறுவன தலைமை செயல் அலுவலர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். 


இந்த ஓய்வு மையங்களை ஸ்விக்கி போன்ற பிற டெலிவரி முகமையின் ஊழியர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரெஸ்ட் பாயிண்ட்ஸ் திட்டம், ஊழியர்களின் தேவையை புரிந்து கொண்டு வரப்பட்டுள்ள நல்ல திட்டமாக பாராட்டுகளை பெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web