குட் நியூஸ் ... 12 பெட்டிகளாக மாறும் புறநகர் ரயில்கள்!

சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில்கள் 9 பெட்டிகளுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து 9 பெட்டி புறநகர் ரயில் சேவைகளும் 12 பெட்டிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் சென்னையில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் தினமும் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.
இதனைக் குறைக்க மற்றும் அதிக இட வசதிகளுடன் பயணிக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து 9 பெட்டி புறநகர் ரயில் சேவைகளும் 12 பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இதன் மூலம் 4 லட்சம் கூடுதல் பயணிகளுக்கு இட வசதி கிடைக்கும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!