குட் நியூஸ்... இனி 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரயில் புக்கிங்கில் லோயர் பெர்த் உறுதி!

 
ரயில் டிக்கெட்  முன்பதிவு

நீண்ட தூர ரயில் பயணங்களில், வயதான பெண்களும் முதியவர்களும் மேல் படுக்கை (அப்பர் பெர்த்) ஒதுக்கப்பட்டதால் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர் என்ற நீண்ட நாள் குற்றச்சாட்டுக்குத் தீர்வாக, இந்திய ரயில்வே அமைச்சர் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

ரயில் கர்ப்பிணி லோயர் பெர்த் தாய்

ரயில்வேயின் புதிய அறிவிப்பின்படி, இனி மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அவர்களின் விருப்பம் எதுவும் தேர்வு செய்யப்படாவிட்டாலும், முன்னுரிமை அடிப்படையில் தானாகவே கீழ் படுக்கை (லோயர் பெர்த்) இருக்கை ஒதுக்கப்படும். இதற்காக, படுக்கை வகுப்பில் ஒரு பெட்டிக்கு 6 முதல் 7 பெர்த்துகளும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் 4 முதல் 5 பெர்த்துகளும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் 3 முதல் 4 பெர்த்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரயில் பெர்த்

இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களுடன் உடன் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் ராஜ்தானி, சதாப்தி மற்றும் அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் சிறப்பான முன்பதிவு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. ஸ்லீப்பர், மூன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் தலா நான்கு பெர்த்துகள் அவர்களுக்கெனப் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், வேறு பெர்த்துகளில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோருக்குக் கீழ் படுக்கை காலியாக இருந்தால், அவர்களுக்கு உடனடியாக அந்த இருக்கை ஒதுக்கித் தரப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!