குட் நியூஸ் ... திருமணமாகாதவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை!

 
மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ரூ1000 பணம் வரவு வைக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் 1.14 கோடி பெண்கள் பயன்பெறும் நிலையில் கூடுதல் ஆன பெண்கள் அடுத்த மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விடுபட்ட பெண்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களே தயாரா?  போட்டி பரிசுத் தொகை ரூ5000!

அதே நேரத்தில் குடும்பத்தில் யாரேனும் அரசு பணியில் இருந்தால் அந்த குடும்ப தலைவிகள், அரசு பணியில் இருப்பவர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. ஒரு ரேஷன் அட்டையில் உள்ள ஒரு பெண்கள் மட்டுமே மகளிர் உரிமைத்தகையை பெற முடியும். ஆனால் அதே நேரத்தில் இதில் சில விலக்குகளும் இருக்கிறது. 

மகளிர் உரிமைத் தொகை

அதாவது ரேஷன் அட்டையில் குடும்பத்தலைவி உயிரிழந்துவிட்டால் அவர்களின் குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவனை இழந்த விதவைப் பெண்கள் தனியாக ரேஷன் அட்டை வைத்திருந்தால் அவர்களும் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பணம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது