குட் நியூஸ்… ரயில் நிலைய கவுண்டரில் வாங்கிய டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்யலாம்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். அதன்படி ரயில்வே நிலையங்களில் கவுண்டரில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைனிலும் ரத்து செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தால் அந்த டிக்கெட்டை ஆன்லைனில் கேன்சல் செய்து கொள்ளலாம்.
அதே நேரத்தில் கவுண்டரில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்யலாமா என்ற சந்தேகம் இருந்து வரும் நிலையில் தற்போது கவுண்டரில் டிக்கெட் எடுத்தால் கூட அதனை ஆன்லைனில் ரத்து செய்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு இந்த டிக்கெட்டை ரத்து செய்யலாம். மேலும் ரத்து செய்த அசல் டிக்கெட்டை டிக்கெட் கவுண்டரில் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!