குட் நியூஸ்..தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னையில் இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை 9 ரூபாய் குறைந்து, ரூ.4,373-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு ரூ.96  குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தை மாதத்தில் திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு இந்த வருடம் அதிர்ச்சி தான் காத்திருந்தது. தங்கத்தின் விலை, தை மாத துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து அதிகரித்து வருவதும், குறையும் போது சொற்ப அளவிலான விலை இறக்கத்திலேயே இருந்து வருகிறது. பங்கு சந்தை வீழ்ச்சியும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. என்ன தான் விலை ஏற்றம் இருந்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது. காரணம் தங்கம் என்பது ஒரு முதலீடு பொருளாக பார்க்கப்படுவதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை எந்த சூழ்நிலையிலும் குறையாமல் இருக்கிறது.

மேலும் எத்தனை நகைகள் இருந்தாலும் தங்கம் நகைகள் மீது உள்ள ஆசை பெண்களுக்கு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய தங்கத்தின் விலையை பொறுத்து தங்கம் வாங்க செல்வதே சிறந்தது என்பதால் தினசரி தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Gold & Silver

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 12 ரூபாய் குறைந்து, ரூ.5,338-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, ரூ.42,704-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,382-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 9 ரூபாய் குறைந்து, ரூ.4,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.74,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web