2026க்கு வரவேற்பு… கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்!
2026-வது ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், அதனை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. ஓர் ஆண்டு முடிந்து, புதிய ஆண்டு தொடங்கப் போகிறது என்பதை இந்த டூடுல் நினைவூட்டுகிறது.

ஒரு அத்தியாயத்தின் முடிவும், மற்றொரு அத்தியாயத்தின் தொடக்கமும் என புத்தாண்டின் அர்த்தத்தை டூடுல் எடுத்துக்காட்டுகிறது. பண்டிகை உணர்வை வெளிப்படுத்த பலூன்கள், வண்ணக் காகிதத் துண்டுகளால் ‘2026’ அலங்கரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் கூடி புத்தாண்டை வரவேற்கின்றனர். நள்ளிரவு மணி அடித்து, 2026 அதிகாரப்பூர்வமாக தொடங்கப்போகிறது என்பதையும் இந்த டூடுல் சுட்டிக்காட்டுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
