கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு - கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது!
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகள் மீதும், கோவை மாநகரக் காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டம் (Goondas Act) பாய்ந்துள்ளது.
கடந்த மாதம் 2-ஆம் தேதி நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகச் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரன், மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி என்ற குணா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பீளமேடு போலீசார் துப்பாக்கியால் சுட்டு அவர்களைப் பிடித்த நிலையில், தற்போது அவர்கள் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 50 பக்கக் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் கோர்ட்டில் விசாரணை தொடங்க உள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தக் குற்றவாளிகள், கூட்டுப் பாலியல் பலாத்காரச் சம்பவத்துக்கு முன்பாகக் கோவையைப் poreduகொலை செய்துவிட்டு விமான நிலையப் பகுதிக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்கள் மீது திருப்பூர் மாவட்டம், கோவை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளிலும் கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே இந்த வழக்குகளில் சிறைக்குச் சென்று ஜாமீனில் விடுதலையான இவர்கள், கோவையில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கித் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து, குற்றச் செயல்களைத் தடுக்க, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த மூவர் மீதும் கோவை மாநகரக் காவல் ஆணையர் சரவணசுந்தர் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நகல் மத்தியச் சிறையில் உள்ள மூன்று பேரிடமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைவுபடுத்தி, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனைப் பெற்றுக்கொடுக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
