அரசுப் பேருந்து - காா் மோதி கோர விபத்து... நண்பர்கள் 4 போ் பலியான சோகம்!

நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதி கோர விபத்திற்குள்ளானதில், புதுச்சேரியைச் சோ்ந்த லாரி உரிமையாளா்கள் 4 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.
புதுச்சேரியைச் சோ்ந்த நண்பர்களான த.சதீஷ்குமாா் (52), சைலேஷ்குமாா் (38), ஸ்டாலின் (44), சரோப் (47) ஆகிய நான்கு பேரும் லாரி உரிமையாளா்கள். இவா்களில் ஸ்டாலின் புதுவை மாநில லாரி உரிமையாளா்கள் சங்கச் செயலராக இருந்து வந்தாா். இவா்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று விட்டு, பெங்களூரில் தங்களது பணிகளை முடித்துக் கொண்ட்டு அங்கிருந்து புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
இவர்களது கார் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் சோ.காட்டுக்குளம் பகுதியில் நேற்று அதிகாலை 3.10 மணியளவில் கடந்து சென்றுக் கொண்டிருந்த போது, திருவண்ணாமலை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் காா் அப்பலமாய் நொறுங்கியது. இதில் காரில் பயணித்த லாரி உரிமையாளா்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனா். பேருந்து ஓட்டுநா், பயணிகள் என வேறு யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
விபத்துக் குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், கீழ்பென்னாத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் லட்சுமி மற்றும் போலீஸாா் விரைந்து சென்று 4 பேரின் சடலங்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து கீழ்பென்னாத்தூா் போலீசா வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!