பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!

 
பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம்!

தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு  அரசுப் பேருந்து ஒன்று கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் வழியாக ஆலங்காயம் நோக்கிச் சென்றது.

திருப்பத்தூர்

கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பிளஸ் 2 மாணவி உட்பட பல பெண்கள் நின்றிருந்த நிலையில், அந்த நிறுத்தத்தில் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த பிளஸ் 2 மாணவி பேருந்தில் ஏறுவதற்காக நீண்ட தொலைவுக்கு வேகமாக ஓடினார்.  பிறகு பேருந்தை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து மாணவி ஏறினார்.

அரசு பேருந்து

பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் சூழலில், மாணவியை ஏற்றாமல் நீண்ட தொலைவு பின்னால் ஓடிவந்த பிறகு தான் பேருந்தில் ஏறமுடிந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள்  எழுந்துள்ளன.இச்சம்பவம் குறித்த வீடியோ  வெளியான நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக  போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web