அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு !

 
அரசுப் பேருந்தின் சக்கரம்
நாமக்கல் மாவட்டத்தில்  ராசிபுரம் அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  ராசிபுரத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 

இந்த அரசுப் பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் ராசிபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் சக்கரம் கழன்று ஓடி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தது. 

இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.  ஓட்டுனரின் சாதுர்யத்தால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக படுகாயமின்றி தப்பியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web