அரசு மருத்துவரின் அலட்சியம்.. பிரசவத்தின் போது அதிக ரத்த போக்கு.. பரிதாபமாக பலியான இளம்பெண்!

 
துர்காதேவி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி துர்காதேவி (25). இருவரும் காதலித்து ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான துர்காதேவி கடந்த (10.11.2024) அன்று பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சைக்கு பின் அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.

பணியில் இருந்த செவிலியர்களும், பணியில் இருந்த சியாமளா என்ற மருத்துவரும் துர்காதேவிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும், பெண் குழந்தை பிறந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட துர்காதேவிக்கு டாக்டர்கள், செவிலியர்கள் முறையாக அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து துர்காதேவியை திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கும் சிகிச்சை அளிக்க முடியாமல், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு (13.11.2024) துர்காதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று (14.11.2024) துர்காதேவியின் உடல் எல்.மாங்குப்பம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டபோது, ​​துர்காதேவி இறந்ததாகக் கூறி, ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சியாமளா மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி துர்காதேவியின் உறவினர்கள் ஆம்பூர்-பெர்ணாம்பத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. மறியலில் ஈடுபட்டனர்.அதன்பின், ஆம்பூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் விருஜகன் தலைமையிலான போலீஸார், ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி தலைமையிலான வருவாய்த் துறையினர், திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் கண்ணகி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து புகார் அளித்தால் துர்காதேவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் கண்ணகி கூறியதாவது.. துர்காதேவிக்கு சிகிச்சை அளித்த ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்களிடம் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை பெற்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web