ஊதிய உயர்வு கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம்... சென்னை மருத்துவக் கல்லூரியில் உண்ணாவிரதம்!
சென்னையில் அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் இறங்கினர். சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். அரசாணை 354ன் படி காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த போராட்டம் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், அகிலன் ஆகியோரின் தலைமையில் மருத்துவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக கோரிக்கைகள் குறித்து அரசிடம் வலியுறுத்தியும் தீர்வு கிடைக்காததால் இந்த போராட்டம் தொடங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவர் அகிலன் கூறுகையில், அரசின் இறுதி முடிவு வரும் வரை மருத்துவமனை வளாகத்திலேயே உண்ணாவிரதத்தை தொடர திட்டமிட்டிருந்தோம் என்றார். ஆனால் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்த கூடாது என காவல்துறை தெரிவித்ததால் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும், விரைவில் அனுமதி பெற்று மீண்டும் தொடங்க உள்ளதாகவும் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
