அரசு ஊழியர்களே உஷார்... இனி இதற்கு முன் அனுமதி அவசியம்... தமிழக அரசு அதிரடி!

 
அரசு ஊழியர்களே உஷார்... இனி இதற்கு முன் அனுமதி அவசியம்... தமிழக அரசு அதிரடி! 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அரசுப் பணி தவிர மற்ற பணிகளில் ஈடுபடும் போது அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த வகையில் அரசு ஊழியர்கள் புத்தகம் வெளியிடுவது தொடர்பாக நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான விமர்சனமோ, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் உள்ளடக்கமோ இருக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களே உஷார்... இனி இதற்கு முன் அனுமதி அவசியம்... தமிழக அரசு அதிரடி! 

அரசின் திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்வதற்கு அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது. அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பது அரசு ஊழியர்கள். எனவே அரசு ஊழியர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லாமல் அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற விதி ஏற்கனவே அமலில் உள்ளது. அரசு ஊழியர்கள் ஒரு சில கட்சிகளில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வரும் நிலையில், அரசுக்கு எதிரான கருத்துகளை கூறும் வகையில் பேசுவது, புத்தகங்களை வெளியிடுவது, கட்டுரையை வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் அரசு ஊழியர்களின் இது போன்ற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் புத்தகம் எழுதுவது, வெளியீடு தொடர்பாக நடத்தை விதிகள் திருத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973ல் எந்தஒரு புத்தகத்தையும் வெளியிடுவதற்கு தன்னை வழக்கமாக ஈடுபடுத்திக் கொள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும் முன் அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web