ஏப்ரல் 25ம் தேதி அரசு ஊழியர்கள் சென்னையில் போராட்டம்!

 
 அரசு ஊழியர்கள்

தமிழக அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பு உட்பட  10 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சங்கமான புதிதாக உருவாக்கப்பட்ட  வலியுறுத்தி வருகிறது. நேற்று தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஏப்ரல் 25ம் தேதி தலைநகர் சென்னையில் பெரிய அளவில் போராட திட்டமிட்டுள்ளனர். 

 அரசு ஊழியர்கள்
இதற்காக தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சுமார் 8000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என fota-geo  தரப்பில் கூறப்படுகிறது. 
போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர், எந்தெந்த துறையைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டமைப்பின் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். 

 அரசு ஊழியர்கள்
சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தகுமார், தமிழ்ச்செல்வி, பீட்டர் அந்தோணி ஆகியோர் இந்த போராட்டத்துக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web