10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு... அரசுத் தேர்வுகள் துறை முக்கிய அறிவிப்பு!
பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் 90 நாட்களுக்குள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து திருநெல்வேலி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி மாவட்டத்தில் இடைநிலைப் பொதுத்தேர்வு (SSLC) எழுதிய தனித்தேர்வர்களின் கவனத்திற்கு, மார்ச் 2017 முதல் ஜூன்/ஜூலை 2020 வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித்தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று நவ.14 முதல் 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச் சீட்டுடன் திருநெல்வேலி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தவறினால் மேற்படி தேர்விற்குரிய மதிப்பெண் சான்றிழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று திருநெல்வேலி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக உதவி இயக்குநர் (பொறுப்பு) ந.சுதா தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
