அடி தூள்... கொண்டாட்டம்... மகளிர் தினம் நாளை பெண்களுக்கு அரசு விடுமுறை!

நாளை மார்ச் 8ம் தேதி புதன்கிழமை சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதற்காக பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி சர்வதேச மகளிர் தினம் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நாளை மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் நாளைய தினம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அத்துடன் அன்றைய தினம் ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டி இல்லா வங்கி கடனுதவிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பிற்கு இந்தியா முழுவதும் இருந்து பெண்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க