அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. ரூ.51 லட்சத்தை ஆட்டைய போட்ட பஞ்சாயத்து அலுவலக அதிகாரி கைது!

உதகையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்ததாக கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலக உதவி இயக்குநரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியின் ஒரசோலை பகுதியைச் சேர்ந்த மனோ, கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
10க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.51 லட்சம் வரை பணம் பெற்று போலி பணி ஆணைகளை வழங்கியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் லட்சுமி பவ்யாவிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா நடவடிக்கை எடுத்து பஞ்சாயத்து உதவி இயக்குநர் மனோவை கைது செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் மனோவை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!