அரசு மருத்துவர்களுக்கு பறந்த உத்தரவு ... தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தால்... அதிரடி உத்தரவு!
May 20, 2025, 13:50 IST
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்களை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பறிக்கப்பட்டதாக புகார்கள் வெளியாகின. இந்த சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.
தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க செல்லும் அரசு மருத்துவர்களை கண்காணிக்க வேண்டும் என அந்த ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. பணிநேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்களா? என கண்காணிக்கவும் ஆணை பிறப்பித்துள்ளது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை தீக்காயப்பிரிவு மருத்துவர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
