தமிழக அரசுப் பள்ளி மாணவிக்கு மலேசியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க வாய்ப்பு!

 
நீலகிரி நீலகிரி
 

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த புளியம்பாறை அரசு உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பில் முதல் மாணவியாக தேர்வு ஆன க.பிரேமா, மேல்நிலைப் பள்ளி படிப்பை குன்னூர் மாதிரி பள்ளியில் முடித்துள்ளார். தற்போது வெளிநாட்டில் படிப்பதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, மலேசியாவிலுள்ள அல் புகாரி இண்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனை முன்னிட்டு பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன். ஜெயசீலன் மாணவியை வாழ்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயகுமார், கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ஜுன், மகேஸ்வரன், தலைமை ஆசிரியர் சங்கர், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சுபாஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!