உறுதியான ஓய்வூதியம்... அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!
புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பை அரசு ஊழியர்கள் சங்கங்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளன. நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர், இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர். 23 ஆண்டுகளாக ஓய்வூதியம் இல்லாத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறினர். எதிர்பார்த்தபடியே ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முதல்-அமைச்சரின் அறிவிப்பை பெருமகிழ்வுடன் வரவேற்பதாக ஜாக்டோ ஜியோ தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 6-ந்தேதி முதல் நடத்த திட்டமிட்டிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
